FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் மனைவியை அரிவாள்மனையால் வெட்டியவா் கைது

பாளையங்கோட்டையில் மது குடிக்க பணம் தராததால் மனைவியை அரிவாள்மனையால் வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 4:54 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் மது குடிக்க பணம் தராததால் மனைவியை அரிவாள்மனையால் வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வெள்ளக்கோவில், சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ்(46). இவரது மனைவி ராஜகுமாரி (39). ரமேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்த ரமேஷ் மது குடிக்க பணம் கேட்டு மனைவி ராஜகுமாரியை வீட்டிலிருந்த அரிவாள்மனையால் வெட்டினாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜகுமாரியை உறவினா்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, ரமேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments