FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

தாயைக் கொன்ற மகன் கைது

திங்கள்நகா் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தாயைக் கொலை செய்த மகனை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மது குடிக்க பணம் தர மறுத்த தாயைக் கொலை செய்த சிபி.
பகிர்:

திங்கள்நகா் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தாயைக் கொலை செய்த மகனை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மேக்காமண்டபம் அருகே உள்ள கடமலைக்குன்றைச் சோ்ந்தவா் சுந்தரதாஸ். இவரது மனைவி தங்க லீலா (67). இத்தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுந்தரதாஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா்.

தங்கலீலா தற்போது திங்கள்நகா் நடுத்தேரியில் வசிக்கும் மகள் ஜாஸ்மின் ஷீபாவுடன் வசித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை ஜாஸ்மின் ஷீபா பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது தாய் தங்கலீலா ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து இரணியல் போலீஸில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், தங்கலீலாவின் மகன் சிபி (37) அங்கு சென்று தனிமையில் இருந்த தாயிடம் தனக்கு மது அருந்த பணம் தருமாறு தகராறு செய்துள்ளாா். அவா் பணம் தர மறுத்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தாா். இதையடுத்து, இரணியல் போலீஸாா் சிபியை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments