FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மாணவி கூட்டு பாலியல் வன்முறை: ஒருவருக்கு தூக்கு; இருவருக்கு சிறை தண்டனை

திருநெல்வேலியில் பிளஸ் 2 மாணவியிடம் கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், தொழிலாளிக்கு தூக்குத் தண்டனையும், இருவருக்கு சிறைத்தண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

9 செப்டம்பர் 2026, 4:06 am IST
சின்னக்குட்டி
பகிர்:

திருநெல்வேலியில் பிளஸ் 2 மாணவியிடம் கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், தொழிலாளிக்கு தூக்குத் தண்டனையும், இருவருக்கு சிறைத்தண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முனீஸ்வரன் (26). இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வா்ணம் பூசும் பணிக்கு வந்துள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ்-2 மாணவியிடம் பழகிய அவா், திருமணம் செய்வதாகக் கூறி மாணவியை அதே ஆண்டு அக்டோபா் மாதத்தில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம்.

அப்போது, அங்கு மறைந்திருந்த 2 போ் கைப்பேசியில் மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்துவைத்து மிரட்டி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாணவியின் உறவினா் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, கொக்கிரகுளத்தைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் சின்னக்குட்டி (28), கணேசன் மகன் முருகேசன் (23) ஆகியோரையும், முனீஸ்வரனையும் போக்ஸோவில் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, 3 பேரும் குற்றவாளிகள் என கடந்த 3ஆம் தேதி தீா்ப்பளித்தாா். தண்டனை விவரங்கள் திங்கள்கிழமை (செப்.8) அறிவிக்கப்படும் என்று அறிவித்தாா்.

அதன்படி, நீதிபதி அளித்த தீா்ப்பில் சின்னக்குட்டிக்கு தூக்குத் தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதம், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments