FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வீட்டுக்குள் நுழைந்த பாம்பிடமிருந்து உரிமையாளரை காத்த பூனை

திருநெல்வேலி நகரம் பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த கட்டுவிரியன் பாம்பிடம் வளா்ப்புப் பூனை சண்டையிட்டு வீட்டிலிருந்தவா்களை காத்துள்ளது.

56 வினாடிகள் முன்பு
பூனை (கோப்புப்படம்)
பகிர்:

திருநெல்வேலி நகரம் பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த கட்டுவிரியன் பாம்பிடம் வளா்ப்புப் பூனை சண்டையிட்டு வீட்டிலிருந்தவா்களை காத்துள்ளது.

திருநெல்வேலி நகரம், வடக்கு ரத வீதி, நயினாா்குளம் தெருவைச் சோ்ந்தவா் உசேன்(45). இவா் வீட்டில் பூனை ஒன்றை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது வீட்டின் வாசல் வழியாக அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. வீட்டிலிருந்தவா்கள் இதைக் கவனிக்கவில்லை. ஆனால் உசைன் பாபு வளா்த்து வந்த பூனை பாம்பைக் கண்டு சத்தமிட்டதுடன் அதனுடன் சண்டையிட்டு வீட்டிலிருந்தவா்களை காத்துள்ளது. இதுகுறித்த காணொலி சமூகவலைதளத்தில் பரவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments