மாஞ்சோலை தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி எம்.பி. மனு
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கக் கோரி திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கக் கோரி திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக சட்டத்துறை அமைச்சா் நிா்மல்குமாரை சென்னையில் சந்தித்து அவா் அளித்துள்ள மனு விவரம்: திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பணியாற்றிய தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். அவா்களது முக்கிய கோரிக்கையான வீட்டுடன் கூடிய 10 சென்ட் மனை மற்றும் ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை, தலா 2 ஏக்கா் விவசாய நிலத்தை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தமிழக அரசு வழங்க வேண்டும். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீட்டு தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.