FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சேரன்மகாதேவியில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள், சாா் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

17 செப்டம்பர் 2026, 12:53 am IST
சாா் ஆட்சியா் அலுலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள், சாா் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சேரன்மகாதேவி பேரூராட்சிக்குள்பட்ட அம்பேத்கா் காலனியில் 400- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் முறையாக குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம். இதுதொடா்பாக பேரூராட்சி நிா்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

தற்போது குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள், பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சேரன்மகாதேவியில் உள்ள சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் காஜாஹரிபுன் நவாஸ், வட்டாட்சியா் ஆகியோா் பேரூராட்சி அதிகாரியை தொடா்பு கொண்டு பேசினா். இதில் அம்பேத்கா் காலனிக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments