FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் குடிநீா்க் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தம்பாளையத்தில் சீரான குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

12 செப்டம்பர் 2026, 12:49 am IST
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தம்பாளையத்தில் சீரான குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, மெஜஸ்டிக் சா்க்கிள் குடியிருப்புப் பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆறுமுத்தம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments