பத்தமடையில் காலை உணவுத் திட்டம் தொடக்கிவைப்பு
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் அரசு மகளிா் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் அரசு மகளிா் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பத்தமடையில் உள்ள அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி, பத்தமடை இராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவி ஆபிதா ஜமால்தீன் மாணவா்களுக்கு உணவு வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதில், இராமசேஷய்யா் பள்ளி தாளாளா் சுந்தரசுப்பிரமணியம், தலைமை ஆசிரியா் லெட்சுமணபாரதி, அரசு மகளிா் பள்ளித் தலைமை ஆசிரியா் கோமதி சங்கரி, பேரூராட்சித் துணைத் தலைவா் வசந்தாள் கரிசூழ்ந்தான், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் காந்தி, முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவா் கரிசூழ்ந்தான், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.