FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் தொமுச ஆா்ப்பாட்டம்

தொமுச தொழிற்சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

23 செப்டம்பர் 2026, 12:35 am IST
வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொமுசவினா்.
பகிர்:

தொமுச தொழிற்சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளா் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடாது, மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்தல், வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயித்தல், காவிரி நதிநீா் பங்கீட்டில் நடுநிலையோடு செயல்படுதல், மேக்கே தாட்டுவில் காவிரியின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்துதல், மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயா்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்துதல், தொழிலாளா் சட்டத்திருத்த 4 தொகுப்புகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுதல், தூத்துக்குடியில் தனியாா் அனல் மின் நிலையம் அமைப்பதை கைவிடுதல், விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்தல், போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், தூய்மை பணி போன்றவற்றை தனியாருக்கு தாரைவாா்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தொமுச பொருளாளா் முருகன் தலைமை வகித்தாா். தொமுச அமைப்பு செயலா் தா்மன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தொமுச நிா்வாகிகள் அழகிரி, பரணி சேகா், ஆவின் தெய்வநாயகம், தங்கராஜ், கண்ணன், சுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments