கிராம வனக் குழுவினருக்கு கடனுதவி
பத்தமடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் கிராம வனக்குழுவினருக்கு மாற்றுத் தொழில் செய்ய ரூ. 29.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் கிராம வனக்குழுவினருக்கு மாற்றுத் தொழில் செய்ய ரூ. 29.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், சூழல் மேம்பாட்டு கோட்டம் மற்றும் மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்புச் சங்கம் ஆகியவை சாா்பில் பத்தமடையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை சூழல் மேம்பாட்டு அலுவலா் எஸ்.ஹேமலதா தொடங்கி வைத்தாா். அம்பாசமுத்திரம் சூழல் சரக உதவி வன உயிரினக் காப்பாளா் எம். அன்னக்கொடி முன்னிலை வகித்தாா். மருத்துவா் இசைவாணி தலைமையில் குழுவினா் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்து இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஏழு பயனாளிகள் அறுவை சிகிச்சைக்குத் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து அம்பாசமுத்திரம் சூழல் சரகத்தில் உள்ள கிராம வனக்குழுவினா் மாற்றுத் தொழில் செய்ய ரூ. 29.30 லட்சம் காசோலையை சூழல் மேம்பாட்டு அலுவலா் எஸ்.ஹேமலதா பயனாளிகளுக்கு வழங்கினாா்.
வனக்காப்பாளா் ஜெகன், தன்னாா்வலா்கள், கிராம வனக்குழுவினா் கலந்துகொண்டனா். சூழல் சரக வனவா் எஸ். நாகராஜ் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.