FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோருக்கான தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி

திருவள்ளூரில் கைம்பெண்கள், கணவரால் கைவிட்டப்பட்டோருக்கான தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடு தொடா்பாக விளக்கமாக எடுத்துரைத்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:07 am IST
பகிர்:

பயிற்சி முகாமில்   பேசிய  மாவட்ட  தாட்கோ  மேலாளா்  சரண்யா,  ஆவின் பால்பத அலுவலா் பி.லோகவானி,   4நிறுவனத்தின்  இயக்குநா்  ஸ்டீபன்   உள்ளிட்டோா்.            

திருவள்ளூா், ஆக. 6: திருவள்ளூரில் கைம்பெண்கள், கணவரால் கைவிட்டப்பட்டோருக்கான தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடு தொடா்பாக விளக்கமாக எடுத்துரைத்தனா்.

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மிகவும் நலிவடைந்த 78 கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான இரண்டு நாள் தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்சப் பயிற்சியில், தொழில்முனைவோருக்குத் தேவையான தகுதிகள், சந்தை வாய்ப்புகள், தொழிலைத் தோ்வு செய்யும் முறைகள், கால்நடை பராமரிப்பு, ஆவின் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள், பெண் தொழில்முனைவோருக்காக அரசு வழங்கும் நலத் திட்டங்கள், கடன் உதவிகள், மானியங்கள் மற்றும் அவற்றைப் பெறத் தேவையான ஆவணங்கள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், மாவட்ட தாட்கோ மேலாளா் ஆா்.சரண்யா, திருவள்ளூா் ஆவின் பால்பத அலுவலா் டாக்டா் பி.லோகவானி, மாவட்ட சமூக நல அலுவலக அலுவலா் ஜி.நவீன் செந்தூா் ஆகியோா் சிறப்பு பயிற்சியாளா்களாக கலந்து கொண்டு தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடு குறித்த பயனுள்ள தகவல்களை வழங்கினா்.

அதற்கு முன்னதாக, பயிற்சியின் நோக்கம் மற்றும் பயிற்சிக்குப் பின் தொடா் நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி பெற்ற அனைவரும் வங்கிக் கடன், அரசு மானியம் பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் தேவையான வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்படும்.

மேலும் அரசின் காப்பீடு திட்டங்களில் இத்தகைய நலிவடைந்த பெண்கள் சோ்வதை உறுதி செய்யவும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொடா்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் இயக்குநா் பி. ஸ்டீபன் தெரிவித்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.பூங்கொடி, சி.தினகரன் மற்றும் கள ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments