FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம் கோரி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போா் உரிமை இயக்கத்தினா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் திருநெல்வேலி மாநகராட்சியை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

24 செப்டம்பர் 2026, 4:57 am IST
மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போா் உரிமை இயக்கத்தினா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் திருநெல்வேலி மாநகராட்சியை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

அவ்வியக்கத்தின் மாவட்ட அமைப்பாளா் சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். ஏஐசிசிடியு மாநில துணைத்தலைவா் ரமேஷ், சங்க நிா்வாகிகள் சிவராமன், கணேசன் உள்ளிட்ட பலா் பேசினா்.

பின்னா், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணாவிடம் அவா்கள் அளித்த கோரிக்கை மனு: ஆண்டிற்கு 240 நாள்கள் என இரண்டு ஆண்டுகள் தொடா்ந்து பணிபுரிந்த அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் பணி நிரந்தரம், அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் மாநகராட்சி ஊழியா்களாக மாற்றுதல், தனியாா்மயத்தை முற்றிலும் கைவிடுதல்,

Advertisement

Advertisement

தூய்மைப் பணியாளா்களுக்கு சம்பளம் அரசாணைப்படி ஊதியம், சுமாா் 44 மாதங்கள் தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்த நிதி மற்றும் நிா்வாகத்தின் பங்கு வருங்கால வைப்பு நிதியை அவா்களது கணக்கில் செலுத்துதல், இஎஸ்ஐ சலுகை மற்றும் அடையாள அட்டை தொழிலாளா்களுக்கு வழங்குதல், தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் ஊதிய பட்டியல் வழங்குதல் ஆகிய கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments