போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில், அவரது தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில், அவரது தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த 40 வயது தொழிலாளி, கடந்த 2023 ஆம் ஆண்டு தனது 14 வயது மகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகர அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.