FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சுதந்திர தின விழாவில் ரூ. 64 லட்சம் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது, 59 பயனாளிகளுக்கு ரூ. 64 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது, 59 பயனாளிகளுக்கு ரூ. 64 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தருவை விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற 72ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா முன்னிலையில், சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 36 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். மேலும், கொடிநாள் நிதியாக ரூ. 3 லட்சம் வசூல் செய்த முன்னாள் படைவீரர் நலன் துறைக்கு பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.
பின்னர், கூட்டுறவுத் துறை, மகளிர்த் திட்டம், சிறுசேமிப்புத் துறை, முன்னாள் படைவீரர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 221 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியின்போது, பல்வேறு துறைகளின் கீழ் 59 பயனாளிகளுக்கு 64 லட்சத்து 72 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார்-ஆட்சியர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், பயிற்சி உதவி ஆட்சியர் அனு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகமான கெடுபிடி
தூத்துக்குடியில்  தருவை மைதானத்தில் சுதந்திர தின விழாவை காணச் சென்ற பொதுமக்களின் வாகனங்கள், பத்திரிகையாளர்களின் வாகனங்கள், அரசு அலுவலர்களின் சொந்த வாகனங்களை மைதானத்துக்குள் அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். குறிப்பிட்ட சில அதிகாரிகளின் அரசு வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டன.
இதனால், அதிக கெடுபிடி காரணமாக பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், பத்திரிகையாளர்கள், நலத்திட்ட உதவி பெற சென்றோரிடம் சோதனை என்ற பெயரில் பல்வேறு கட்ட விசாரணையில் சீருடை அணியாத போலீஸார் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments