FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெரியதாழை சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை காரைபெயர்ந்து விழுந்ததில் தம்பதி காயம்

பெரியதாழை சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை காரை திங்கள்கிழமை பெயர்ந்து விழுந்ததில் தம்பதி காயமடைந்தனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

பெரியதாழை சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை காரை திங்கள்கிழமை பெயர்ந்து விழுந்ததில் தம்பதி காயமடைந்தனர்.
சாத்தான்குளம் ஒன்றியம், பெரியதாழை சுனாமி குடியிருப்பு சேவியர் காலனியில் வசித்து வருபவர் சகாயராஜ் (56), மீனவர். இவரது மனைவி ரொமிக்கா. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். அவரது ஒன்றரை வயது குழந்தை, சகாயராஜ் வீட்டில் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், சகாயராஜ், அவரது மனைவி, பேரக் குழந்தை ஆகிய மூவரும் திங்கள்கிழமை வீட்டில் இருந்தனர். மற்றவர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரை காரையில் ஏற்பட்டிருந்த விரிசலில் திடீரென உடைந்து கான்கிரீட் இடிபாடுகள் வீட்டினுள் விழுந்தன. இதில், சகாயராஜும், அவரது மனைவியும் காயமடைந்தனர். பேரக்குழந்தை அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியது. காயமடைந்த தம்பதி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக சகாயராஜ், சாத்தான்குளம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ் கூறுகையில், பெரியதாழையில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக படுக்கப்பத்து கிராம நிர்வாக அலுவலரிடம்  விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments