FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தச்சமொழியில்  பயனற்ற நிலையில் குடிநீர்த் தொட்டி

சாத்தான்குளம் தச்சமொழியில் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வற்றியதால், குடிநீர்த் தொட்டி பயனற்று காணப்படுகிறது. 

Updated On : 7 ஜூன் 2018, 5:34 am IST
பகிர்:

சாத்தான்குளம் தச்சமொழியில் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வற்றியதால், குடிநீர்த் தொட்டி பயனற்று காணப்படுகிறது. 
பேரூராட்சி சார்பில், தச்சமொழி நாடார் தெற்கு தெருவில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைத்து ரூ. 2 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வற்றியதால்,  குடிநீர்த் தொட்டி பயன்பாடு இல்லாமல் முள்புதர் வளர்ந்து காணப்படுகிறது. 
இதுகுறித்து நகர பாஜக தலைவர் அ. ராம்மோகன் கூறியது: குடிநீர்த் தொட்டி பயனற்று கிடப்பதால் சேதமடையும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள்  பார்வையிட்டு ஆழ்துளைக் கிணற்றை சீரமைக்க வேண்டும். அல்லது அருகே உள்ள 1ஆவது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments