FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோவில்பட்டி கே.ஆர்.ஏ. பள்ளியில் ஆய்வகம் திறப்பு

கோவில்பட்டி கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அடல் டிங்கரிங் லேப் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கோவில்பட்டி கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அடல் டிங்கரிங் லேப் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக்கூட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, பள்ளிச் செயலர் கே.செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளி ஆட்சிக் குழுத் தலைவர் வசுந்த்ரா செல்வராஜ் முன்னிலை வகித்தார். 
நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகவேல், முதன்மையர் மணிசேகர், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கக மாவட்டச் செயலர் முத்துசாமி, தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானி தேவபிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஆய்வகத்தை திறந்து வைத்து பேசியது: மாணவர், மாணவிகளின் அறிவியல் திறனை வெளிப்படுத்துவதும், மேன்மைப்படுத்துவதுமே இந்த ஆய்வகத்தின் நோக்கம். அன்றாட வாழ்வில் அறிவியல் செயல் திறனை உபயோகிக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மாணவர்கள் ஒவ்வொருவரும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு சாதனை படைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அணுசக்தி அவசியம் என்றார் அவர். 
பள்ளி முதல்வர் ஜெயகுமார் வரவேற்றார். பள்ளி நிர்வாக அதிகாரி ருத்ரமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments