ஆறுமுகனேரியில் திருவிளக்கு பூஜை
ஆறுமுகனேரியில் அய்யா வைகுண்டரின் 30ஆவது ஆண்டு அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்புத் திருவிழாயையொட்டி திரு விளக்கு பூஜை நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் அய்யா வைகுண்டரின் 30ஆவது ஆண்டு அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்புத் திருவிழாயையொட்டி திரு விளக்கு பூஜை நடைபெற்றது.
கடந்த ஆக. 31ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், தினசரி மாலையில் திருஏடு வாசிப்பு பாராயணம், இரவு உகப்படிப்பு தர்மம் ஆகியவை நடைபெற்றன.
மேலும், விழா நாள்களில் உச்சிப்படிப்பு, அன்னதானம், இரவில் திருவிளக்கு பூஜை மற்றும் திருக்கல்யாண வாசிப்பு நடைபெற்றன. நிறைவு நாளன்று நண்பகலில் உச்சிபடிப்பு, அன்னதானம், பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு ஆகியவை நடைபெற்றன.
ஏற்பாடுகளை ஆர். தினகரபாண்டியன், பி. ராஜமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.