FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோவில்பட்டியில் இருவேறு இடங்களில் பணம், நகை பறிப்பு

கோவில்பட்டியில் இரு வெவ்வேறு இடங்களில் இளைஞர் மற்றும் தொழிலாளியை தாக்கி பணம், செல்லிடப்பேசி மற்றும்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கோவில்பட்டியில் இரு வெவ்வேறு இடங்களில் இளைஞர் மற்றும் தொழிலாளியை தாக்கி பணம், செல்லிடப்பேசி மற்றும் நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த கண்ணன் மகன் செல்வகுமார் (21).  பட்டதாரியான இவர், செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் காமநாயக்கன்பட்டிக்கு கேட்டரிங் வேலைக்கு சென்றாராம்.  பசுவந்தனை சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, இவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கிவிட்டு,  அவரிடமிருந்த ரூ. 500,  ஏ.டி.எம். அட்டை மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனராம்.  
இதுகுறித்து அவர் காவல் துறையினரிடம் முறையிட்ட போது, அவர்கள் முறையான பதில் தெரிவிக்கவில்லையாம். இதையடுத்து அவர் புதன்கிழமை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜை சந்தித்து புகார் அளித்தார். 
இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் கூறியது: இச்சம்பவம் குறித்து காவல் நிலையங்களில் கேட்டு துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரமானாலும் புகார் தெரிவிக்க விரும்பினால் 94981-01835 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர். 
மற்றொரு சம்பவம்: கோவில்பட்டி ஜோதி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கணேசன். இவர், அப்பகுதியில் புதன்கிழமை கடை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்ததையடுத்து,  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவரது உறவினர் மதுரை வியாகப்ப நகரைச் சேர்ந்த தங்கராஜ் (58) செவ்வாய்க்கிழமை இரவு கணேசன் வீட்டுக்கு வந்தாராம்.  இந்நிலையில், செல்லிடப்பேசியில் பேசுவதற்காக வீட்டுக்கு வெளியே வந்த அவர்,  காளியம்மன் கோயில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த மோதிரம், ரொக்கம் ரூ.3,500 மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்து வருகிறார். மேலும், அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments