பாரதியார் நினைவு தினம்: எட்டயபுரத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை
மகாகவி பாரதியாரின் 97ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார்
மகாகவி பாரதியாரின் 97ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு மணிமண்டபம், பாரதி பிறந்த இல்லம் ஆகியவற்றில் உள்ள அவரது சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் எம். வீரப்பன், கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் விஜயா, எட்டயபுரம் வட்டாட்சியர் வதனாள், மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், அரசுத் துறை அதிகாரிகள் பாரதியார் நினைவு மணிமண்டபம், பாரதி பிறந்த இல்லம் ஆகியவற்றில் உள்ள பாரதியின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, வருவாய்க் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் வதனாள், பாரதி இல்லக் காப்பாளர் மகாதேவி ஆகியோர் பாரதி சிலைக்கு முன் அமர்ந்து, அவரது கீர்த்தனைகளைப் பாடி புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், பாரதி மணிமண்டப வழிகாட்டி பினோ, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகரன், செந்தில்குமார், கிராம உதவியாளர் மாரியப்பன், பாரதி அன்பர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.