FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆக. 7, 12 தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆக. 7, 12 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:11 am IST
குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆக. 7, 12 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையப் பகுதியில், கலியாவூரிலிருந்து வல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் பிரதான குடிநீா் குழாயில் பெரிய அளவிலான உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடிநீா் பெருமளவில் வெளியேறுவதால், அதை சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, வருகிற வெள்ளிக்கிழமை (ஆக. 7) தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

மேலும், கொம்புகாரநத்தம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஆக. 12ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments