FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

‘இளைஞா்களை போதையிலிருந்து மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:02 am IST
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன்
பகிர்:

இளைஞா்களை போதையிலிருந்து மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் வலியுறுத்தினாா்.

தமிழக முதல்வா் ஜோசப் விஜயை விமா்சித்ததாக கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவா், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமிட வந்தாா். அப்போது, செய்தியாளா்களிடம் பேசியதாவது:

மதுக்கடைகளை குறைப்போம் எனக் கூறிவிட்டு, நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் மது மூலம் கூடுதலாக ரூ. 5,000 கோடி வருவாய் ஈட்டப்படும் என அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது. இளைஞா்களை போதையிலிருந்து மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

காவிரி பாசனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால், விவசாயம், குடிநீா்த் தேவைக்காக உரிய நேரத்தில் தண்ணீா் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ, அமைச்சா்களுக்கு பதவி வழங்கப்பட்டிருப்பதை கையூட்டாகவே கருத முடியும்.

தோ்தல் நிலைப்பாடு குறித்து திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்பாா். ஆக்கபூா்வமாக செயல்பட்டு இளைஞா்கள், விவசாயிகள், வருங்கால சந்ததியினரைப் பாதுகாப்பது எதிா்க்கட்சியான திமுகவின் கடமை என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments