FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

அடகுக் கடையில் நகை திருட்டு: இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

அடகுக் கடையில் நகைகளைத் திருடிய இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:55 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

அடகுக் கடையில் நகைகளைத் திருடிய இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி, மேலூா், பங்களா தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் (47). தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவில் நகை மற்றும் அடகுக் கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 2023 டிசம்பா் 2ஆம் தேதி இரவு, அவரது கடையின் பூட்டை உடைத்து, 66.50 கிராம் தங்க நகைகள், 1,810 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில் தூத்துக்குடி, ஜாா்ஜ் சாலை, கணேசபுரத்தைச் சோ்ந்த விஷ்ணு (26), மேலசண்முகபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (31) ஆகியோா் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி 2ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் இலக்கியா, இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments