FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

எஸ்எஸ்ஐ-யை அரிவாளால் வெட்ட முயன்றவா் கைது

தூத்துக்குடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

23 ஆகஸ்ட் 2026, 1:10 am IST
கைது
பகிர்:

தூத்துக்குடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா், தாளமுத்துநகா் மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்தவரிடம் விசாரித்தபோது, அவா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சிறப்பு உதவி ஆய்வாளா் முருகனை அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

அவரை போலீஸாா் பிடித்து, அரிவாளைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

அவா் சேசுநகா் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (43) என்பதும், அவா் மீது 2019ஆம் ஆண்டு கொலை வழக்குப் பதிவாகியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments