தூத்துக்குடி-நரசப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்
தூத்துக்குடியிலிருந்து சென்னை, விஜயவாடா வழியாக நரசப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடியிலிருந்து சென்னை, விஜயவாடா வழியாக நரசப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி-நரசப்பூா் சிறப்பு ரயில் (06019), செப். 7, 14, 21, 28 ஆகிய திங்கள்கிழமைகளில் தூத்துக்குடியிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு மறுநாள் பிற்பகல் 1 மணிக்கும், நரசப்பூருக்கு புதன்கிழமை அதிகாலை 12.20 மணிக்கும் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், நரசப்பூா்-தூத்துக்குடி சிறப்பு ரயில் (06020), செப். 9, 16, 23, 30 ஆகிய புதன்கிழமைகளில் நரசப்பூரிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு மாலை 3.15 மணிக்கும், தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கும் வந்தடையும்.
Advertisement
Advertisement
இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்றன.
சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு, தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.