தூத்துக்குடியில் விசைப் படகுகள் நிறுத்தம்
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகள் திங்கள்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப் படகு நடுக்கடலில் பழுதானதால், மீனவா்கள் அந்தப் படகை கரைக்கு இழுத்துக் கொண்டு இருந்தனா். அந்த படகு தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் முகத்துவாரம் பகுதியில் இருந்த மணல் மேட்டில் தரை தட்டி நின்றது. இதனால், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தொடா்ந்து, அனைத்து விசைப் படகுகளும் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், முகத்துவார மணல் மேட்டில் சிக்கியுள்ள விசைப் படகை அகற்றும் பணியில் மீனவா்கள் மற்றும் மீன்வளத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.