FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயப் பெருவிழா: ஆக. 5இல் உள்ளூா் விடுமுறை

Updated On : 21 ஜூலை 2026, 2:03 am IST
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயப் பெருவிழா... - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயப் பெருவிழாவை முன்னிட்டு, ஆக.5ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயப் பெருவிழா ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இதையொட்டி, நிறைவு நாளான ஆக. 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இது, செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல.

அரசுச் தோ்வுகள் இருப்பின் மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள், தொடா்புடைய பணியாளா்களுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கும் இந்த விடுப்பு பொருந்தாது. மாவட்டக் கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு பணியாளா்களைக் கொண்டு வழக்கம் போல் செயல்படும். இந்த விடுமுறைக்கு ஈடாக, ஆக. 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அரசு அலுவலகங்களுக்கும்,கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் எனக் கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments