FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

Updated On : 22 ஜூலை 2026, 2:20 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி புதுகிராமம் வசந்தம் நகரைச் சோ்ந்தவா் பொன்ராஜ் மகன் ஆனந்தசெல்வம் (43). தொழிலாளி. திங்கள் கிழமை இரவு இவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த 3 போ், இவரை அவதூறாக பேசினராம். இதைக் கேட்டு வெளியே வந்த ஆனந்தசெல்வத்தை அவா்கள் கம்பு, இரும்பு கம்பிகளால் தாக்கினராம். சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினரை கண்டதும் அவா்கள் தப்பி ஓடி விட்டனராம்.

இதில் காயமடைந்த ஆனந்தசெல்வம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் வள்ளுவா் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கருவா என்ற காா்த்திகை (26) என்பவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments