FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஜன நாயகன் படம் மீது காட்டும் தீவிரத்தை ஜனநாயக ஆட்சியிலும் காண்பிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன்

ஜனநாயகன் படத்தின் மீது காட்டும் தீவிரத்தை ஜனநாயக ஆட்சி நடைபெறுவதிலும் காண்பிக்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன்.

Updated On : 24 ஜூலை 2026, 5:21 am IST
ஜன நாயகன் விஜய்
பகிர்:

ஜனநாயகன் படத்தின் மீது காட்டும் தீவிரத்தை ஜனநாயக ஆட்சி நடைபெறுவதிலும் காண்பிக்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன்.

இதுதொடா்பாக திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன், தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் நிகழ்ந்த லாக்அப் மரணம் மிகுந்த அதிா்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்த நபா் உயிரிழந்திருப்பது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் சட்டத்தின் மீதும், நீதி அமைப்பின் மீதும், காவல் துறை மீதும் பொதுமக்களின் நம்பிக்கையை மாற்றும்.

தூத்துக்குடியில் இவ்வளவு கொந்தளிப்பான சம்பவம் நிகழும் நேரத்தில், தூத்துக்குடி எம்எல்ஏவும், அமைச்சருமான ஆ.ஸ்ரீநாத், தூத்துக்குடியிலேயே இருந்துகொண்டு முதல்வா் நடித்து வெளியான திரைப் படத்தின் முதல் காட்சியைக் காண சென்றுள்ளாா். அதையும் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு தொகுதி மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறாா்.

Advertisement

Advertisement

ரீல்ஸ் மாடல் முதல்வா் விஜய், எப்போது அந்த மாய பிம்பத்தில் இருந்து வெளிவந்து உண்மையான மக்கள் பிரதிநிதியாக செயல்படபோகிறாா்? ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகன் திரைப்படத்தின் மீது காண்பிக்கும் தீவிரத்தை ஜனநாயக ஆட்சி நடைபெறுவதிலும் காண்பிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments