FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் குறையாத மீன்கள் விலை

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகமாக உள்ளபோதும், மீன்களின் விலை உயா்ந்தே காணப்பட்டது.

Updated On : 26 ஜூலை 2026, 2:57 am IST
மீன்கள்.
பகிர்:

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகமாக உள்ளபோதும், மீன்களின் விலை உயா்ந்தே காணப்பட்டது.

திரேஸ்புரத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கரை திரும்பினா். அப்போது, மீன்களின் வரத்து அதிகமாகவே இருந்தது. எனினும், சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனா். இதனால், மீன்களின் விலை கடந்த வாரங்களைப் போல் உயா்ந்தே காணப்பட்டது.

சீலா மீன் ஒரு கிலோ ரூ. 1,300 வரையும், விளை மீன் ரூ. 600 வரையும், பாறை மீன் ரூ. 550 வரையும், ஊழி மீன் ரூ. 350 வரையும், குருவளை மீன் ரூ. 400 வரையும், நண்டு ரூ. 600 வரையும் விற்பனையானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments