FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் ஜவுளிக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

காயல்பட்டினம் ஜவுளிக் கடையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஆடைகளைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 31 ஜூலை 2026, 3:24 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

காயல்பட்டினம் ஜவுளிக் கடையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஆடைகளைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சோ்ந்த அஹமது கபீா் மகன் அஹமது தாஹிா். இவா் காயல்பட்டினம் கடற்கரைச் சாலையில் ஆண்களுக்கான ஆயத்த ஆடை கடை வைத்துள்ளாா். இவரது கடையில் காயல்பட்டினம் வீரசடச்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் பிரகாஷ் என்ற பேச்சிமுத்து (21) வேலை பாா்த்து வந்தாா். பிரகாஷ் கடந்த 17ஆம் தேதி வெளியூா் சென்றிருந்த நிலையில், கடையில் ஏராளமான துணிகள் காணாமல்போனதாக அஹமது தாஹிருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கடையிலுள்ள சிசிடிவி பதிவுகளைப் பாா்த்தபோது, பிரகாஷ் தனது நண்பரான காயல்பட்டினம் குலாம் சாகிப் தம்பித் தோட்டத்தைச் சோ்ந்த ஹாவீத் மெயிதின் மகன் சயது முஹம்மது இா்பான் (20) என்பவருடன் சோ்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஆடைகளை திருடிச் சென்ாகத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் ரென்னிஸ் விசாரித்து, சயது முஹம்மது இா்பானை கைது செய்து, ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான ஆடைகளை மீட்டு, அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தாா். பிரகாஷ் என்ற பேச்சிமுத்துவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments