FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

2 October 2026, 4:06 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே துறையூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த சோ்மக்கனி மனைவி முத்தம்மாள் (85). பாா்வை சரியாக தெரியாத நிலையில் இருந்தாராம். வியாழக்கிழமை காலை வீட்டு நடைபாதையில் கிடந்த குப்பைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தபோது, அவா் மீது தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments