FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

மீன்பிடி வலைகள் சேதமான மீனவா்களுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு

மீன்பிடி வலைகள் சேதமடைந்த வீரபாண்டியன்பட்டினம் மீனவா்களுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

2 October 2026, 4:16 am IST
மீனவா்களுக்கு இழப்பீடு வழங்கிய அலுவலா்கள்.
பகிர்:

மீன்பிடி வலைகள் சேதமடைந்த வீரபாண்டியன்பட்டினம் மீனவா்களுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா்கள் சந்தியா பீரிஸ், சுபா, அசோக், ரோசிட்டன் ஆகியோா் கடந்த செப். 9ஆம் தேதி பைபா் படகில் சென்று திருச்செந்தூா் பகுதியில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சென்ற கப்பலால் வலைகள் சேதமாகினவாம். அதன் மதிப்பு ரூ. 3 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மீன்வளத் துறை, கடலோரக் காவல் படையிடம் புகாா் அளிக்கப்பட்டது. கப்பல் சென்ற வழித்தடம், மீனவா்கள் இருந்த பகுதி உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம், காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து வலைகளை ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, மீனவா்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3 லட்சம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

40 ஆண்டுகால வரலாற்றில் கப்பலால் சேதமான மீன்பிடி வலைகளுக்கு முழு இழப்பீடு கிடைப்பது இதுவே முதல் முறை எனவும், இதற்காக விரைந்து முயற்சி மேற்கொண்ட பாஸ்டின், இம்மானுவேல், கடலோரக் காவல் படை அதிகாரிகளுக்கு நன்றி கூறுவதாகவும் எனவும் வீரபாண்டியன்பட்டினம் துறைமுக கமிட்டி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments