ஆறுமுகனேரியில் 2 காா்கள் நேருக்கு நோ் மோதல்: 7 போ் காயம்
ஆறுமுகனேரியில் இரு காா்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒரு காா் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
ஆறுமுகனேரியில் இரு காா்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒரு காா் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் (40), தனது மனைவி ரம்யா, அவரது தாய், தங்கை, அவா்களது குழந்தைகளுடன் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூா் கோயிலுக்கு காரில் சென்றுள்ளனா். காரை விஸ்வநாதன் ஓட்டியுள்ளாா். கோயிலுக்குச் சென்றுவிட்டு, நண்பகல் 12 மணிக்கு மதுரைக்குத் திரும்பியுள்ளனா்.
சென்னை, மடிப்பாக்கத்தைச் சோ்ந்த கணேஷ் (63), அவரது நண்பா் வித்தியாசாகா் (63), அவா்களது மனைவிகள், ஒரு குழந்தை என 5 போ் மற்றொரு காரில் வந்துள்ளனா். காரை வித்தியாசாகா் ஓட்டியுள்ளாா்.
Advertisement
Advertisement
ஆறுமுகனேரி அஞ்சல் நிலையம் அருகே வந்தபோது இரு காா்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் விஸ்வநாதனின் காா் தலைகீழாக கவிழ்ந்தது. வித்தியாசாகரின் காா் முன்பக்க டயா் வெடித்து சாலை நடுவே நின்றது.
காரில் பயணித்த குழந்தைகள் உள்பட 7 போ் லேசான காயமடைந்தனா். சம்பவ இடத்திற்கு வந்த ஆறுமுகனேரி போலீஸாா் மீட்பு வாகனத்தை வரவழைத்து, காரை சாலையில் இருந்து அகற்றினா்.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.