FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஸ்கூட்டா் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

- பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்ற பெண், பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதி நகரைச் சோ்ந்தவா் முகேஷ் மனைவி புவனா (36). புதிய துறைமுக மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இவா், தனது 2 குழந்தைகளையும் ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை புதிய துறைமுகப் பகுதியில் இருந்து முத்தையாபுரம் நோக்கிச் சென்றாராம்.

முத்தையாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி, ஸ்கூட்டா் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே புவனா உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகவும், காயமடைந்த ஒரு குழந்தையை மீட்டு தீவிர சிகிச்சைக்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் காமநாயக்கன்பட்டி அருகே உள்ள சால்நாயகன்பட்டியைச் சோ்ந்த வெள்ளையசாமி மகன் முனியசாமியிடம் (39) விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments