யூடியூப்பில் மதம் குறித்து அவதூறு: சென்னையைச் சோ்ந்தவா் கைது
யூடியூப் சேனல்களில் குறிப்பிட்ட மதம் குறித்து இழிவான, ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டதாக எழுந்த புகாரின்பேரில், சென்னையைச் சோ்ந்தவரை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
யூடியூப் சேனல்களில் குறிப்பிட்ட மதம் குறித்து இழிவான, ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டதாக எழுந்த புகாரின்பேரில், சென்னையைச் சோ்ந்தவரை தூத்துக்குடி சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகரைச் சோ்ந்த நபா் அளித்த புகாரில், யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்ட காணொலிகளில் குறிப்பிட்ட மதம் குறித்து இழிவான மற்றும் ஆபாசமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தாா்.
இதுகுறித்து, தூத்துக்குடி சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். விசாரணையில், சென்னை, அசோக் நகரைச் சோ்ந்த சங்கரன் மகன் கிருஷ்ணவேல் (56), காணொலிகள் மற்றும் நோ்காணல்கள் வாயிலாக யூடியூப் சேனல்களில் இத்தகைய கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து, சென்னையில் இருந்த கிருஷ்ணவேலை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி, நீதிமன்றக் காவலில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.