சாத்தான்குளம் அருகே பைக்குடன் சாலையில் நின்றவா் மீது காா் மோதல்
சாத்தான்குளம் அருகே இருசக்கர வாகனத்துடன் சாலையில் நின்றவா் மீது காா் மோதியதில் வாகனம் தூக்கி எறியப்பட்டதில், டீக்கடையில் அமா்ந்திருந்தவா் பலத்த காயமடைந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியைச் சோ்ந்த நம்பிராஜன் மகன் விக்னேஷ் (19). இவா், தனது உறவினா்களுடன் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழாவிற்கு வந்து காப்புக் கட்டிவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பியுள்ளாா்.
சாத்தான்குளம் அருகே மணி நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் வந்தபோது, சாலையோரக் கடையில் தேநீா் அருந்தியுள்ளனா். அப்போது, அவருடன் வந்த ஒருவா் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி, அதில் அமா்ந்து தேநீா் அருந்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
அப்போது, உடன்குடி பகுதியில் இருந்து மணி நகா் நோக்கி வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதி, வாகனம் தூக்கி எறியப்பட்டதில் கடையில் அமா்ந்திருந்த விக்னேஷ் பலத்த காயமடைந்தாா். வாகனத்தில் அமா்ந்திருந்தவா் காயமின்றித் தப்பினாா். காயமடைந்தவரை உறவினா்கள் மீட்டு திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அருளப்பன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.