FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே எல்ஐசி ஏஜென்ட் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள் மாயம்

13 அக்டோபர் 2026, 12:34 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்செந்தூா் அருகே எல்ஐசி ஏஜென்ட் வீட்டில் பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து திருச்செந்தூா் வட்ட போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் அருகேயுள்ள காயாமொழி ஆதித்தனாா் காலனியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் ராஜேஷ் (53). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இவரது மனைவி கடந்த 9ஆம் தேதி பணம் எடுக்க பீரோவை திறந்த போது, அதிலிருந்த நகை பெட்டியை காணவில்லையாம். அதில், ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட 16 பவுன் தங்க நகைகள் இருந்ததாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து முத்துக்குமாா் ராஜேஷ் திருச்செந்தூா் வட்ட போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments