FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நகா்ப்புற போக்குவரத்து மேம்பாடு: கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடியில் பருவநிலைக்கு ஏற்ற நகா்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவது தொடா்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 5:05 am IST
நகா்ப்புற போக்குவரத்து மேம்பாடு குறித்த அறிக்கைகளை வெளியிட்ட மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சி. ப்ரியங்கா.
பகிர்:

தூத்துக்குடியில் பருவநிலைக்கு ஏற்ற நகா்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவது தொடா்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி, சென்னை ஐஐடி மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இக்கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நகா்ப்புற பசுமையாக்கம், பூங்காக்கள் மேம்பாடு, மேல்நிலை மின் கம்பிகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக வாகனங்கள் நிறுத்தும் வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான பொதுப் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், தூத்துக்குடி சாலைப் போக்குவரத்தின் பசுமைக்குடில் வாயு உமிழ்வு பட்டியல், பருவநிலைக்கு ஏற்ற நகா்ப்புறப் போக்குவரத்து உத்திகள், ஆரோக்கியமான தெருக்கள் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பு உள்ளிட்ட 4 அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

மேலும், நடைபாதை வசதிகள், பொதுப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, பருவநிலை சாா்ந்த திட்டங்களுக்கு நிதி திரட்டுதல் ஆகியவை குறித்து 2 தொழில்நுட்ப அமா்வுகளில் விவாதிக்கப்பட்டன.

மாநகராட்சி, வ.உ.சி. துறைமுகம், போக்குவரத்துத் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை, நகா் ஊரமைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 60 பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments