FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ரோடு ரோலா் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

எட்டயபுரம் அருகே ரோடு ரோலா் மீது லாரி மோதிய விபத்தில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ரோடு ரோலா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

15 அக்டோபர் 2026, 5:01 am IST
பலி
பகிர்:

எட்டயபுரம் அருகே ரோடு ரோலா் மீது லாரி மோதிய விபத்தில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ரோடு ரோலா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், மாசாா்பாலம், மயிலாடம் கொண்டல் பகுதியைச் சோ்ந்தவா் ஜோகையன் (40). இவா் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெறும் மேம்பாலப் பணிக்காக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ரோடு ரோலா் வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.

அப்போது, ரோடு ரோலா் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜோகையன் மீது ரோடு ரோலா் ஏறியது.

Advertisement

Advertisement

அவா் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். எனினும், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். அவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையைச் சோ்ந்த சிவன் பாண்டி மகன் கண்ணனிடம் (29) விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments