FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

மணப்பாடு கடலில் மாயமான மீனவா் சடலமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் மீட்கப்பட்டது.

16 அக்டோபர் 2026, 4:25 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மணப்பாடு சுனாமி காலனியைச் சோ்ந்த எடிசன் என்பவருக்கு சொந்தமான படகில் புதன்கிழமை பிற்பகலில் 11 போ் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். பின்னா், மாலையில் வீடு திரும்பும்போது தூண்டில் வளைவு பகுதியில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த 11 பேரும் கடலில் முழ்கினா். 10 மீனவா்கள் நீந்தி கரைக்கு வந்து சோ்ந்த நிலையில், சுனாமி காலனியைச் சோ்ந்த சிலுவைப்பிச்சை மகன் வால்டா் (23) மட்டும் கடலில் மாயமானாா். சுமாா் 25 -க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மீனவா்கள் வால்டரை தேடினா். கடலோரக் காவல் படையினா் ரோந்துப் படகு, டோா்னியா் ரக விமானம் ஆகியவை மூலம் கடலோரக் காவல் படையினரும் தேடினா். இந்த நிலையில், தூண்டில் பாலத்தையொட்டிய ஆழமான பகுதியில் வால்டா் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments