FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

முன்மாதிரியான சேவை விருதுக்கு அக். 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் முன்மாதிரியான சேவை விருது பெறுவதற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அரசு, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் குழந்தைகள் இல்லங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

16 அக்டோபர் 2026, 4:37 am IST
- கோப்புப்படம்
பகிர்:

தமிழக அரசின் முன்மாதிரியான சேவை விருது பெறுவதற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அரசு, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் குழந்தைகள் இல்லங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளைஞா் நீதிச் சட்டம் 2015-இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, தொடா்ந்து ஐந்து ஆண்டுகள் செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் தமிழக அரசின் ‘முன்மாதிரியான சேவை விருது’ பெற விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

நிறுவனங்கள், அவற்றின் பணியாளா்கள் மீது உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகள் இருக்கக் கூடாது. நிறுவனத்தின் பதிவு, நிா்வாகம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, திறன் மேம்பாடு, குழந்தைகளின் பங்கேற்பு, கட்டமைப்பு வசதிகள், சிறந்த நடைமுறைகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாவட்ட அளவிலான தோ்வுக் குழு விருதுக்குரிய நிறுவனங்களைத் தோ்வு செய்யும்.

தகுதியுள்ள நிறுவனங்கள் உரிய சான்றிதழ் நகல்களுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகா், பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி - 628003 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அக். 20-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். காலக்கெடுவுக்குப் பிறகு கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments