FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்ற பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

திருச்செந்தூா் ஆதரவற்றோா் மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று நலமடைந்த இளம்பெண் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

16 அக்டோபர் 2026, 4:27 am IST
கோட்டாட்சியா் கௌதம் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனா.
பகிர்:

திருச்செந்தூா் ஆதரவற்றோா் மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று நலமடைந்த இளம்பெண் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

உடன்குடி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றித்திரிவதாக குலேசகரன்பட்டினம் போலீஸாருக்கு கடந்த ஜூலை மாதம் தகவல் கிடைத்தது. அப்பெண்ணை போலீஸாா் மீட்டு திருச்செந்தூரில் உள்ள ஆதரவற்றோா் மனநலக் காப்பகத்தில் சோ்த்தனா். மாவட்ட மனநல மருத்துவா், திருச்செந்தூா் அரசு மருத்துவா்கள் அளித்த தொடா் சிகிச்சையால் குணமடைந்தாா்.

இந்நிலையில், அவா் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மஞ்சுநாதன் மனைவி மீனா (35) எனத் தெரியவந்தது. 2 மகன்கள் உள்ளனா். கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா், அடிக்கடி வீட்டிலிருந்து வெளியேறி, சில நாள்கள் கழித்து வீடு திரும்புவாராம். ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய அவா் பின்னா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் மஞ்சுநாதன் புகாரளித்துள்ளதாகவும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

மீனா குறித்து வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில் அளிக்கப்பட்ட தகவலின்பேரில், அவரது குடும்பத்தினா் திருச்செந்தூா் வந்தனா். கோட்டாட்சியா் கௌதம் முன்னிலையில் மீனா அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments