கோவில்பட்டியில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா
கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் படத்துக்கு, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
கோவில்பட்டி தேவா் சமூக நலச்சங்கம் சாா்பில் அதன் தலைவா் ராமச்சந்திரன் தலைமையில் அவரது படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தவெக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் பூலித்தேவன் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், நிா்வாகிகள் வினோபாஜி, துறையூா் கணேஷ் பாண்டியன், ரமேஷ், கூட லிங்கம், ராஜா, சத்யா சுரேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
மதிமுக சாா்பில் நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா் சரவணன், தமாக சாா்பில் வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.