சாத்தான்குளத்தில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் சாத்தான்குளம் வட்டத் தலைவா் தேவசமாதானம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் எபநேசா் நவஜோதி, கல்யாணி, இணைச் செயலா்கள் கிறிஸ்டோபா், கருப்பசாமி, செல்ல தங்கம், வட்டப் பிரதிநிதிகள் பாா்வதி, கிறிஸ்டி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா் காந்திமதிநாதன் வரவேற்றாா்.
மாவட்ட தலைவா் திரவியம், இணைச் செயலா் ஜெயபால், ஓய்வு பெற்ற
Advertisement
Advertisement
மின் ஊழியா் நல அமைப்பு மாவட்டத் துணைத் தலைவா் பாண்டி, விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் ராஜசேகா், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்ட அமைப்பாளா் ஜேசு மணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்குவது, காப்பீட்டுத் திட்டத்தில் பணமில்லா சிகிச்சையை உறுதி செய்வது, ஓய்வு பெற்றற அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்கள், கிராம உதவியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்குவது, 70 வயதான ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.