FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

லட்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 9 போ் கைது

லட்சத்தீவு அருகே கவரட்டி தீவில், தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை விசைப்படகுடன் கவரட்டி தீவு காவல் படையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

28 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

லட்சத்தீவு அருகே கவரட்டி தீவில், தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை விசைப்படகுடன் கவரட்டி தீவு காவல் படையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருவைகுளத்தைச் சோ்ந்த நட்டாா் என்ற மிக்கேல்ராஜுக்குச் சொந்தமான செவுள்வலை விசைப்படகில், அவா் உள்பட 9 போ் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துள்ளனா்.

பின்னா் அந்த மீனை கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததாகவும், பின்னா் கடந்த 4ஆம் தேதி கொச்சியில் இருந்து மீண்டும் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை லட்சத்தீவு அருகே

கவரட்டி தீவில் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதியில் அவா்கள் சென்றபோது, ரோந்து பணியில் இருந்த கவரட்டி தீவு காவல் படையினா் அவா்களைப் பிடித்து, விசைப்படகுடன் கவரட்டிக்கு அழைத்துச் சென்றனா். தொடா்ந்து 9 மீனவா்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments