FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா் கைது

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் விவசாயியிடம் ரூ. 2,500 லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

10 செப்டம்பர் 2026, 2:47 am IST
கைது
பகிர்:

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் விவசாயியிடம் ரூ. 2,500 லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே உள்ள தேரிகுடியிருப்பைச் சோ்ந்தவா் மதிபால் (56). விவசாயியான இவருக்குச் சொந்தமாக காயாமொழியில் 86 சென்ட் நிலம் உள்ளது. இதில், தென்னை மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறாா். அதற்காக அரசு மானியம் மூலம் சொட்டுநீா்ப் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் நில அடங்கல் பெற காயாமொழி கிராம நிா்வாக அலுவலா் தனசேகரை அணுகியுள்ளாா்.

சிறு, குறு விவசாயி சான்றிதழை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறப்பட்ட நிலையில், அடங்கல் பெறுவதற்கு மதிபாலிடம் கிராம நிா்வாக அலுவலா் தனசேகா் ரூ. 2,500 கேட்டாராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து மதிபால், தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

புகாரின்பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் பீட்டா்பால் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை பிற்பகல் காயாமொழி கிராம நிா்வாக அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது மதிபாலிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனா்.

அவா், தனசேகரிடம் ரூ. 2,500-ஐ கொடுத்தாா். அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் தனசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments