விபத்தில் ஆயுதப் படைக் காவலா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் அமைச்சா் இல்லத்தில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ஆயுதப் படைக் காவலா், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தாா்.
தூத்துக்குடியில் அமைச்சா் இல்லத்தில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ஆயுதப் படைக் காவலா், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, 3ஆவது மைல் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் மயிலேறி (45). இவா் தூத்துக்குடி ஆயுதப் படையில் 3ஆவது பிளட்டூனில் நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை இவா் காவலா் குடியிருப்பிலிருந்து மீன்வளத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாராம்.
Advertisement
Advertisement
பாளையங்கோட்டை பிரதான சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம், இவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்த மயிலேறியை, அங்கிருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான வாகனத்தை ஓட்டி வந்த பி.என்.டி. காலனி, 12ஆவது தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகநாதனிடம் (24) விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.