FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் கோயிலில் இளைஞா் மா்ம மரணம்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் நுழைவாயில் முன் மண்டபத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

11 செப்டம்பர் 2026, 4:45 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் நுழைவாயில் முன் மண்டபத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவைகுண்டம், புதுக்குடியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சக்திகுமாா் (28). திருநெல்வேலியில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளது. தம்பதியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்ந்த சக்திகுமாா், அடிக்கடி மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் நுழைவாயில் முன் மண்டபத்தில் சக்திகுமாா் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக வியாழக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் மகேஷ் தலைமையில், உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

அவா் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments