திரேஸ்புரத்தில் கேரை மீன்கள் வரத்து அதிகரிப்பு
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை, கேரை மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை, கேரை மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
திரேஸ்புரம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதும், விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ. 1,200, நண்டு ரூ. 800, ஊளி, பாறை, விளை உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ. 400 முதல் ரூ. 450 வரை விற்பனையாகின. கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் கேரை மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. கிலோ ரூ. 300 வரை விற்பனையானதால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.